Posts

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ஹாசிப் கான்

Image
எல்லோரைப் போலவும் பல்வேறு கார்ட்டூன் சித்திரங்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால் ஒரு கார்ட்டூனின் அங்கமாகவே உணர்ந்தது ஹாசிப் கானின் சித்திரங்களில்தான். First person camera போல் இதோ ஒரு first person cartoon. டரியல் ஆகி ஆப்பரேஷன் தியேட்டரில் நிராதரவாகப் படுத்திருக்கிறோம். அரை போதையில் மெதுவாகக் கண்களைத் திறந்து பார்த்தால்... மூஞ்சிக்கருகே ஐந்து சர்ஜன்கள் ‘ஹேப்பி நியூ இயர்’ என்று வரவேற்க, “என்னது இன்னும...் முடியலியா?” என்று மிச்ச சொச்ச உயிரும் போகிறது. இந்த சித்திரத்தில் நாமும் ஒரு பாத்திரம். ஹாசிப் கானின் நகைச்சுவை சித்திரங்களில் எனக்கு மிகவும் பிடித்தது இதுதான். நான்கு வருடங்களுக்கு முன் இதைப் பார்த்தவுடன் நிலைகொள்ளாமல் சிரித்தபடி நிலைமையை நொந்துகொண்டது இன்னும் நினைவில் இருக்கிறது. வயதாகவே ஆகாது இந்த கலாட்டூனுக்கு. வருடா வருடம் சர்ஜன்கள் மட்டும் மாற, காட்சி என்னவோ அப்படியேதான் இருக்கப்போகிறது. மன்மோகன் இடத்தில் மோடியை கற்பனை செய்து பார்த்தேன். இன்னும் அதிக சிரிப்பு, இன்னும் அதிக கடுப்பு.

          வட்டியும் முதலும் படிப்பதற்காக ஆனந்த விகடன் வாங்க ஆரம்பித்து, ஒரு கட்டத்தில் வட்ட…

அனிதாவும், பல அநீதிகளும்!

அனிதாவின் தற்கொலை உலுக்கியெடுத்துவிட்டது. “தற்கொலை தீர்வே இல்லை”, என்ற வாதத்தை முன்னிலைப்படுத்தி நேற்று முன்தினம் பலர் திடீர் மனோதத்துவ நிபுணர்களாக மாறியதைப் பார்த்தபோது ஆத்திரமாக வந்தது. ஆனால் பாத்ரூம் கண்ணாடியின் முன் ஒரு சக மனிதிக்காக கையறு நிலையில் இரண்டு முறை அழுது, சோர்வில் தூங்கி மறுநாள் கண்விழித்து சற்றே திடமான மனநிலையில் அமர்ந்து யோசிக்கையில், அனிதாவின் தற்கொலை துர்நிகழ்வில் ஏதோ ஒரு பக்கம் நிற்பதற்கு ஒவ்வொருவருக்கும் இருக்கும் காரணங்களில் பல்வேறு சிக்கலான காரணிகள் சம்பந்தப்பட்டிருப்பதை உணர முடிந்தது. இத்துர்நிகழ்வை அரசியலாக்குபவர்கள் நீட்டுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டவர்களாக, சமூக நீதி பேசுபவர்களாக, இடஒதுக்கீட்டிற்கு ஆதரவானவர்களாக, ஆளும் மத்திய மாநில அரசுகளுக்கு எதிரானவர்களாக, மோடி எதிர்ப்பாளர்களாக, தாழ்த்தப்பட்டோர் உரிமைகள் செயல்பாட்டாளர்களாக, இந்திய இறையாண்மையைக் கேள்விக்குள்ளாக்குபவர்களாக, இவற்றுள் ஒன்றையோ பலவற்றையோ காரணிகளாகக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொன்றும் மற்றொன்றோடு ஏதோ ஒரு வகையில் தொடர்புள்ளவை, ஒவ்வொன்றும் தனித்தனியாக ஆழமானவை. இதை அரசியலாக்காதீர்கள் என்று…

மரணம்

Image
மரணிப்பது நாம் என்றாலும்
நம்முடைய மரணம் என்னவோ
நமக்கு நிகழ்வதில்லை.
மரணத்தின் அருகாமையை அடைந்தாலும்
மரணத்தை எட்டும் அந்தக் கணத்தில்
மரணத்தை உணராமலேயே
நாம் மரணித்துவிடுகிறோம்.
நம்முடைய மரணத்தை
நம்மைச் சார்ந்தோரே உணர்கிறார்கள்.
நாம் இனியும் இங்கில்லை
இனியும் உலாவ மாட்டோம்
பேச மாட்டோம்
உயிர்த்திருக்க மாட்டோம்
என்ற உண்மை அறைகையில்
அவர்களுக்கு ஏற்படும் உணர்வு
அதுவே நம்முடைய மரணம்.
அதுவே மரணத்தை உணர்தல்.
நம்முடைய மரணம்
நம்மைச் சார்ந்தோருக்கு நிகழ்கிறது.
மரணிப்பது நாம் என்றாலும்
நம்முடைய மரணம் என்னவோ
நமக்கு நிகழ்வதில்லை.
அது நிகழ்வதற்குள்
நாம் மரணித்துவிடுகிறோம்.

- வ.விஷ்ணு

கடவுள்களும் குருமார்களும் - குஷ்வந்த் சிங்

Image
மறைந்த குஷ்வந்த் சிங்கின் ‘Gods and Godmen of India' நூலை வாசித்து முடித்தேன். கடவுள், மதம், மூடநம்பிக்கை, ஆன்மிக இயக்கங்கள், சாமியார்கள் குறித்த குஷ்வந்தின் கருத்துகள், அனுபவங்கள், விமர்சனங்கள் ஆகியவற்றின் தெளிவான தொகுப்பு இது. கடவுள் மற்றும் ஆன்மிகம் குறித்த குஷ்வந்தின் நிலைப்பாடு எவ்வாறு உருவாயிற்று என்பதை 62 கட்டுரைகளில் குஷ்வந்த் சிங்கிற்கே உரிய நகைச்சுவை எழுத்தின் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. குஷ்வந்த் சிங் ஒரு ‘அக்னாஸ்டிக்’ என்பது அனைவருக்கும் தெரியும். அதாவது கடவுள் இருக்கிறார் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாத, ஆனால் கடவுள் இல்லவே இல்லை என்று அறுதியிட்டுச் சொல்லவும் முடியாத, தானே உணரும் வரை கடவுள் இல்லைதான் என்ற நிலைப்பாடு கொண்டவர்கள். ஒருவகையில் இது கொஞ்சம் அவஸ்தையான நிலைப்பாடும் கூட. கடவுள், பிறவிப்பயன், மரணம் குறித்த கேள்விகள் மனதின் ஓரத்தில் உறுத்திக்கொண்டே இருக்கும்.

          மதம், மத அமைப்பு, மதம் சார்ந்த அரசியல் போன்றவற்றில் குஷ்வந்த் பல்வேறு சிக்கல்களைப் பார்க்கிறார். ஒவ்வொரு மதத்திலும் இரண்டு வகையான குழுவினர் இருக்கிறார்கள். ஒரு சாரார் மாற்று மதத்தினரோடு இ…

ஒரு நாத்திகனின் பிரார்த்தனைகள் - ஸ்ரீதர் சுப்ரமணியம்

Image
நேற்று ஸ்ரீதர் சுப்ரமணியம் சாரின் பிறந்தநாளுக்கு முகநூலில் பூ.கொ.சரவணன் அண்ணன் வாழ்த்துப் பதிவிட்டு கீழே அவர் புத்தகத்தின் அமேஜான் சுட்டியைத் தந்திருந்தார். ‘ஒரு நாத்திகனின் பிரார்த்தனைகள்’ புத்தகம் கிண்டில் வடிவில் 120 ரூபாய்க்கு கிடைத்தது. ஒரே மூச்சில் கடகடவென்று வாசித்து முடித்தபோது இந்த உலகத்தை தர்க்க மதிப்பீடு செய்த ஒரு மானுடவியல் பயணத்தில் உடன்சென்றதுபோல் இருந்தது. நம்முடைய கடந்த கால, நிகழ்கால விழுமியங்களைத் தொடர்புபடுத்தி நிகழ்கால சிக்கல்கள் குறித்த தன் கருத்தை வரலாற்றுப் பார்வையோடு அவர் முன்வைக்கும்போது ஒவ்வொரு வாசகருக்கும் அது ஒவ்வொரு விதமான உணர்வுகளைத் தரும். இப்புத்தகத்தை நாம் நம் அடையாளங்களுக்கு அப்பாற்பட்டு திறந்த மனதுடன் அணுகுகிறோமா, அல்லது இப்புத்தகம் விடாமல் கைக்கொள்ளும் தர்க்கத்தை நம் மத, கலாசார, தேசிய அடையாளங்கள் உட்புகுத்தும் முன்முடிவுகளால் உந்தப்பட்டு முற்றாக நிராகரிக்கிறோமா, என்பதைப் பொறுத்து இப்புத்தகத்தின் வாசிப்பு அனுபவம் வேறுபடும். இது எல்லா புத்தகங்களுக்கும் பொருந்தும்தானே என்று கேட்டால், பல புத்தகங்களில் வெகு அரிதாகவே காணக்கிடைக்கும் ஒரு பண்பு இத…

நூலிலிருந்து சீரீஸ் - 1: நடுநிலை நக்கீஸ்

Image
//அத்தியாயம் 22:

சில ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு சம்பவம் எனக்கு நல்லதொரு பாடத்தைக் கற்றுத்தந்தது. ஜெயமோகன் மொழியில் சொல்ல வேண்டுமென்றால், ‘வாழும் கணம்’ ஒன்று என்னை வந்தடைந்தது.

------------------------------------------------------------------------------------

அன்றைய ஒன்பது மணி விவாத நிகழ்ச்சி நிச்சயம் பரவலாகப் பார்க்கப்படும் என்பது எனக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. பொதுவாக நான் நெறிப்படுத்தும் நிகழ்ச்சிகளில் எவ்வாறு விருந்தினர்கள் தங்களின் நிலைப்பாட்டை எடுக்கின்றனர் என்று கவனிப்பதுண்டு. “என்னைத் தவிர மற்ற அனைவரும் நடுநிலைவாதிகள் அல்ல என்று சொல்ல மாட்டேன், ஆனால் இந்த அறையிலேயே பெரிய நடுநிலைவாதி நான்தான்”, என்று நிறுவ முயற்சிப்பார்கள். அதுதான் அன்றும் நடந்தது.

கோட் சூட் போட்டுக்கொண்டு ஸ்டூடியோ சென்ற போது நால்வரும் ‘உம்’மென்று உட்கார்ந்திருந்தனர். ஒருவர் அந்த நடிகரின் தீவிர ரசிகர், இன்னொருவர் சமூக நீதி செயல்பாட்டாளர். இவர்கள் போக அந்த பெண் பத்திரிகையாளர் பக்கம் நின்று பேச தொலைக்காட்சி நிர்வாகம் பெருந்தன்மையாக இரண்டு பேரை அழைத்திருந்தது.

சமூக நீதி செயல்பாட்டாளர் அதிரடி காட்டினார். “ரசி…

‘கக்கூஸ்’ ஆவணப்படம்

Image
தினமும் மலம் கழித்துவிட்டு பாத்ரூம் ஃப்ளஷை அமிழ்த்தி அந்த அருவருப்பான இதை உள்ளே தள்ளிவிட்டு வருகிறோம். நம்முடைய அந்த அருவருப்பான இதை ஒரு சகமனிதன் கைகளால் அள்ளி வீசுகிறான் என்ற உண்மையை நாம் எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறோம்? ‘ஹே அதுவும் ஒரு தொழில் மேன்’ என்றா? ‘அதான் சம்பளம் வாங்குகிறார்களே’ என்றா? ‘பிடிக்கலேன்னா வேற தொழிலுக்குத்தான் போகட்டுமே’ என்றா? தினமும் மலத்தை முகர்ந்து மூக்கைப் பொத்தி நகரும் நாம், இந்த உண்மையும் நாறுகிறது என்பதற்காக மூக்கைப் பொத்திக் கடந்துவிடப் போகிறோமா? அப்படியே கடந்தாலும் இம்முறை எவ்வளவு தூரம் விலகினாலும் நாற்றம் குறையாது, ஏனெனில் இம்முறை நாற்றம் நம்மிடமிருந்துதானே வீசுகிறது? நகரத்தில் சாதி இல்லவே இல்லை என்று இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளப்போகிறோம்? அல்லது ஒருவேளை தெரிந்தேதான் இந்த வஞ்சகத்திற்குத் துணை போகிறோமா?

          இதுவரை ‘கக்கூஸ்’ ஆவணப்படம் பார்க்காதவர்கள், கண்டிப்பாகப் பார்த்துவிடுங்கள். உங்களை அந்தப் படம் துன்புறுத்தும், தூங்க விடாமல் துன்புறுத்தும். இல்லை குமட்டுகிறது, பார்க்க முடியவில்லை என்று அது கொடுக்கும் சாட்ட…