Posts

Showing posts from May, 2012
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

பாஸ், நீங்க‌ ந‌ல்ல‌ கெட்ட‌வ‌ரா இல்ல‌ கெட்ட‌ ந‌ல்ல‌வ‌ரா ?

Image
முன்குறிப்பு : இப்ப‌திவு இங்கு குறிப்பிட‌ப்ப‌ட்டுள்ள‌ ந‌ப‌ர்க‌ள் யாரையும் புண்ப‌டுத்தும் நோக்குட‌னோ அவ‌ர்க‌ளின் குண‌நல‌ன்க‌ளையும் ப‌ழ‌க்க‌ வ‌ழ‌க்க‌ங்க‌ளையும் ப‌ற்றி அவ‌தூறு சொல்லும் வ‌கையிலுலோ எழுத‌ப்ப‌ட‌வில்லை. இது முழுக்க‌ முழுக்க‌ ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌ ந‌ப‌ரின் பூர‌ண‌ அனும‌தியுட‌னே எழுத‌ப்ப‌டுகிற‌து. இது ஒரு பெர்ச‌ன‌ல் டைரியின் சாய‌ல் கொண்ட‌ ஒரு ஒப்புத‌ல் வாக்குமூல‌மே அன்றி யாரையும் வாழ்வில் வ‌ழித‌வ‌றிய‌வ‌ர்க‌ளாக‌ சித்த‌ரிக்கும் ஒரு சுய‌ச‌ரிதையின் தேவைய‌ற்ற‌ அத்தியாய‌ம் அல்ல‌. இத‌னைப் ப‌டித்த‌பின் எங்க‌ளைப் ப‌ற்றிய‌‌ ந‌ல்ல‌பிப்பிராய‌ம் கெடுவ‌து அர்த்த‌ம‌ற்ற‌து, அவ‌சிய‌ம‌ற்ற‌து. இது ஒரு வாழ்விய‌ல் பாட‌ம் ம‌ட்டுமே, பாழ்விய‌ல் பாட‌ம் அல்ல‌.
------------------------------------------------------------------------------------------------------------

"ல‌வ‌டிக்க‌பால் !!", ச‌ப்பு க‌த்தினான்.

ம‌த்திய‌ கைலாஷ் செல்வ‌த‌ற்காக‌ Bus 13-இல் ஏறும்போதுதான் இந்த‌க் கூத்து. 2011-ம் வ‌ருட‌ம் SSN காலேஜில் சேர்ந்த‌ வ‌ன‌வாணி ஆண்பிள்ளைக‌ள் நானும் ச‌ப்புவும் ம‌ட்டும்தான். நான் இங்கி பிங்கி பாங்கி போட…

ஒரு கிலோ ஜாமீன் குடுங்க‌ மை லார்ட் !

Image
அது ஏன் சார் வாய‌த் தொற‌ந்தா எப்ப‌ப் பாத்தாலும் 2ஜி, ஊழ‌ல், தி.மு.க‌-னு உயிரை வாங்குறீங்க‌ ? ம‌த்த‌ ஊழ‌ல்க‌ளை ம‌ற‌ந்த‌ மாதிரி இதையும் ம‌ற‌ந்துற‌ வேண்டிய‌துதானே ? அட‌ ! மொத‌ல்ல‌ இது ஒரு ஊழ‌லே இல்லையே ! எப்ப‌டினு கேக்க‌றீங்க‌ளா ? ஏன் சார், ஆளானப்பட்ட கபில் சிபலே "ஊழலே நடக்கவில்லை"-னு சொல்லிட்டாரு. அதையும் மீறி இப்படி அகராதியா கேள்வி கேட்டா என்ன அர்த்தம் ? அவர் மேல நீங்க என்ன மதிப்பு வெச்சிருக்கீங்க ? அவர்தான் தன் கணித மேதைமையைப் பயன்படுத்தி 'ஒன்னும் ஒன்னும் ரெண்டு'-னு பூச்சி பூச்சியா கணக்குப் போட்டு, "இதனால அரசுக்கு லாபம்தான்"-னு உண்மையை உலகுக்கு அறிவிச்சிட்டாரே ! அப்பறம் என்ன ? சரி, முதல்ல வருபவருக்கு முன்னுரிமை-னு ராஜா அண்ணன் டெல்லியில ஒரு மாதிரி ஹோட்டல் பிசினஸ் நடத்தினாரு. எவ்வளவு காசு குடுத்தாங்கங்கறதா முக்கியம் ? வயிறு நெறைய சாப்பாடு போட்டாங்கங்கறதுதானே முக்கியம் ? அதைத்தானே அண்ணன் செஞ்சாரு ? அவர் செஞ்சது புண்ணியம் சார், புண்ணியம் ! இது ஊழ‌லே இல்ல‌ !

சரி ! 'குறைந்த விலைக்கு லைசென்ஸை வாங்கி, அதை உடனே அதிக விலைக்கு விற்று, அரசுக்கு சேர வேண்டிய வருமானத…