Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

நூலிலிருந்து சீரிஸ் - 2: இலையுதிர்கால இல்லூமினாட்டிகள்

//கேள்வி: இந்த இல்லூமினாட்டி பக்தர்கள் செய்யும் பிடிவாதம் இருக்கிறதே, அதை சமாளிக்கவே முடியவில்லை. ஒரு வழி சொல்லுங்களேன். - க.பாஸ்கரன்


பதில்: அன்புள்ள பாஸ்கரன், கவலைப்படாதீர்கள். எனக்கு நேற்று முன்தினம் ஒரு கடிதம் வந்தது. “இந்த இல்லூமினாட்டி பக்தர்களின் தொல்லை தாங்க முடியவில்லை. ஒரு வழி சொல்லுங்களேன்” என்று இல்லூமினாட்டியின் தலைவர் பிரான்சிஸ்கோ ராக்பெல்லர் எழுதியிருந்தார். படித்ததும் கண்கலங்கிப் போனேன். இல்லூமினாட்டி பக்தர்களை நான் செல்லமாக இல்லூக்கள் என்று அழைப்பேன். ஏனெனில் இல்லூக்கள் குழந்தைகள் போல பாஸ்கரன். இதுதான் இப்படித்தான் என்று அடம் பிடிப்பார்கள். சொப்பு சாமான் வைத்து ஒரு குழந்தை சமையல் செய்வதுபோல், கடற்கரை மணலில் கைதுளாவி இரண்டு சிறுவர்கள் மாளிகை கட்டுவதுபோல், இல்லூக்கள் யூடியூபில் நான்கு வீடியோக்களைப் பார்த்துவிட்டு ஆராய்ச்சி செய்துவிட்டேன் என்று குதூகலிப்பார்கள். அந்தக் குதூகலத்தை ரசிக்கும் பக்குவத்தை நீங்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும் பாஸ்கரன். ஒரு பொறுப்பான பெற்றோரைப் போல் நாம்தான் அவர்களைக் கொஞ்சி சமாதானப்படுத்த வேண்டும். அவர்களை தெர்மாக்கோல் போல மென்மையாகக் கைகளில் ஏந்தி “இல்லுல்லுல்லூ” என்று வாஞ்சையாகக் கொஞ்சுங்கள். பிரான்சிஸ்கோ ராக்பெல்லரை அப்படித்தான் இப்போது தூங்க வைத்தேன்.//


- ‘இலையுதிர்கால இல்லூமினாட்டிகள்’ நூலிலிருந்து
#நூலிலிருந்து_சீரிஸ்

Comments

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

இந்தியாவும் இந்தியும்

நவீன இந்தியாவின் சிற்பி