Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

தாராளவாத ஜனநாயகத்தை அடைய குறுக்கு வழிகள் கிடையாது

தாராளவாத ஜனநாயகத்தை அடைய குறுக்கு வழிகள் கிடையாது. தாராளவாதப் போக்குடைய மக்கள் இல்லாதவரை தாராளவாத ஜனநாயகம் சாத்தியமில்லை.

ஜனநாயகம் என்பது வெறும் உடல்தான். அதற்கு உயிரூட்டுவது தாராளவாதமே.

தன்னுடைய தனித்துவ பண்பாட்டு விழுமியங்களை உள்ளடக்கியதொரு தாராளவாதக் கொள்கையை ஒரு நாடு கண்டெடுக்காதவரை, அவற்றைப் பரவலாக்காத வரை, அந்நாட்டில் தாராளவாத மக்கள் உருவாக மாட்டார்கள்.

இதில் குறுக்குவழிகள் இல்லவே இல்லை. தாராளவாத ஜனநாயகம் உங்கள் நாட்டில் நிலைபெற விரும்பினால், அதற்குத் தேவையான அறிவியக்கத்தில் உங்களை இணைத்துக்கொள்ள நீங்கள் நேரத்தை ஒதுக்க வேண்டும்.

சகிப்புத்தன்மையற்ற ஜனநாயகத்தின் ஆபத்து வெறும் சகிப்பின்மை மட்டுமல்ல; நிலையின்மையும் உறுதியின்மையும் அதன் அடிப்படை இயல்புகளாகும்.

ஜனரஞ்சக அரசியல் தலைவர்கள் சகிப்பின்மையோடு இருப்பது அல்ல பிரச்னை. பிரச்னை என்னவென்றால், இவர்களுக்கு வெகுமக்கள் ஆதரவும், பரவலான வாக்கு வங்கியும் இருப்பதுதான்.

“நம்முடைய தனித்துவ உயரிய தேசத்தை ஆபத்தான ‘மற்றவர்களும்’ ‘பண்பாட்டை மறந்த மேட்டுக்குடியினரும்’ தனதாக்கிக்கொள்கிறார்கள்; நம்மிடமிருந்து நம் உரிமத்தைப் பிடுங்கிக்கொள்கிறார்கள்”, என்று ஜனரஞ்சக அரசியல் கருத்தாக்கம் போதிக்கும்.

உடனே நீங்கள் என்ன தீர்வை முன்வைப்பீர்கள்? வெளியிலிருந்து ஜனநாயகத்தைக் கொண்டு வரவேண்டும் என்றா? அல்லது அமைப்பிற்குள்ளிருந்து வரும் கலகங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றா? அல்லது ‘அன்பு சர்வாதிகாரம்’ என்று சொல்லிக்கொண்டு வருபவர்களை மாற்றாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றா?

சமூகத்தைக் காப்பாற்ற இந்த ஜனரஞ்சக அரசியல் தலைவர்களைக் ‘களைந்துவிடலாம்’ என்று நீங்கள் நினைப்பதன்மூலம், மீண்டும் மீண்டும் நீங்கள் ஜனரஞ்சகக் கருத்தாக்கத்தை வலுப்படுத்தவும் நிரூபிக்கவுமே செய்கிறீர்கள்.

எனவே இதில் குறுக்குவழிகளுக்கு இடமே இல்லை. ஜனரஞ்சக அரசியல்வாதிகள் அதிகாரத்தில் இருக்கக் கூடாது என்று விரும்புகிறீர்களா? அப்படியென்றால் அவர்களுக்கு வாக்கு வங்கியை நிராகரியுங்கள். அதை சாத்தியமாக்குவதை நோக்கி உங்கள் உழைப்பை செலுத்துங்கள். தாராளவாதத்தை உங்கள் பண்பாட்டின் விழுமியமாக உள்ளே கொண்டு வந்து அதைப் பரப்புங்கள், பிரபலப்படுத்துங்கள், பரவலாக்குங்கள்.


- ஐயாத் எல்-பாக்தாதி
(தமிழில்: வ.விஷ்ணு)

Comments

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

நவீன இந்தியாவின் சிற்பி

இந்தியாவும் இந்தியும்